Saturday, December 1, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பில்?

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரையில் தொடர் வகுப்புப் புறக்கணிபில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ம திகதி மாணர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடியைத் தொடர்ந்து இரண்டு நாள் அடையாளப் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் நால்வரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இதனால் மாணவர்கள் விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவம் அகற்றப்படும் வரையில் தமது வகுப்பு புறக்கணிப்பு தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளைஇ யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டாரவும் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment