30 வருடகால யுத்தத்தினால் வெற்றிக்கொள்ள முடியாமல் போனவிடயங்களை புதிய முயற்சியினால் வெற்றிக்கொள்வதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு வைபவம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு பிரத விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி இங்கு மேலும் கூறுகையில்:
சட்டத்தரணி என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கிறேன். நீதிமன்றமும் தனது கொளரவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும்.
வேறு சிலர் பாராளுமன்றத்தில் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக வேறொரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே உரையாற்றுகின்றனர். யுத்தம் நிறைவடைந்த போதிலும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் இன்னும் முடிவடையவில்லை.
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்குபவர்களால் அரசியலில் ஈடுபட முடியாது. நாட்டை பொறுப்பேற்க வேண்டுமாயின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கவேணடும்.
ஒரு சிலரின் தவறுகள் பகிரங்கப்படுத்தப்படும் போது எதிர்க்கட்சி சென்று அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர்.
மக்களிடம் எந்த சந்தர்பத்திலும் பொய்கூற முடியாது. நாட்டை உண்மையில் நேசிப்பவர்கள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள் என்றார். இதேவேளை நுர்ல்களை ஜனாதிபதி சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைத்தார் என்பதும் இங்கு குறிப்பிட்த்தக்கது.
No comments:
Post a Comment