Monday, December 24, 2012

தொலைபேசியில் அழைத்து வாளால் வீச்சு யாழ்ப்பாணத்தில் இளைஞர் படுகாயம்

கையடக்கத் தொலைபேசியில் இடமொன்றிற்கு வருமாறு அழைத்து இளைஞர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கோணாவளை வீதியைச் சேர்ந்த துரைசாமி ரமணன் வயது 29 என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

இவர் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

யார்? ஏன்? இவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று இதுவரையில் தெரியவில்லை. இவர் ஒரு காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment