Saturday, December 1, 2012

பாலியல் தொந்தரவு வழக்குகளில் முதலாம் இடத்தை எட்டிப்பிடித்த இலங்கை

பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜேரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென் ஆசிய பிராந்தியத்திலே பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது.

விசேடமாக பொது போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment