எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைப்பீட இரண்டாவருடம் மாணவி எஸ்.துளசிகா வயது 22 என்ற மாணவியே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்றிரவு 7.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கைபட கடிதம் எழுதி வைத்த பின்னரே உயிரிழந்ததா யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இக்கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment