மலேரியா நோயினை 2014 ஆம் ஆண்டிற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற எமது இலக்கினை நோக்கி நாம் செயற்படுகின்ற போதிலும் அந்நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதனால் நாம் அனைவரும் அந்நோயை கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேரியா நோய் சுமார் 10 ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்டது. 1937 ஆம் ஆண்டில் மாத்திரம் 82 ஆயிரம் பேர் மலேரியாவினால் இறந்ததுடன் 15 இலட்சம் பேர் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாகினர். இந்நோய் தாக்கம் காரணமாக அநுராத புரத்தில் குடும்பம் குடும்பமாக மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இந்நோய் ஓரளவு கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் 1960 இல் இந்நோய் மீண்டும் தலைதூக்கியது. 1970 ஆம் ஆண்டில் இந்நோய் நாட்டின் அநேக பிரதேசங்களில் பரவியது. 2 ஆயிர மாம் ஆண்டளவில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா நோய் தாக்கத்துக்கு உள்ளாகினர்.
கடந்த வருடம் (2012 இல்) நாடுமுழு வதும் 23 பேர் மாத்திரமே மலேரியா தாக்கத்திற்கு உள்ளாக்கியிருந்த போதும் வெளியிலிருந்து இலங்கை வந்த 70 பேர் இதற்கான நோய்க்காவிகளாக செயற்பட் டமையினால் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளா னோரின் எண்ணிக்கை 93 ஆக இருந்தது.
இலங்கையில் மலேரியா நோயினை இல்லாமல் ஒழித்த போதிலும் வெளிநாட்டி லிருந்து வருபவர்களிடமிருந்து இந்நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே மலேரியாவை ஒழிக்கும் வேலைத் திட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் கூறினார்
No comments:
Post a Comment