Friday, April 26, 2013

இராணுவம் மீது ரணில் வீண் பழி சுமத்துவது கவலையளிக்கிறது!


hathurusinghe-2
-மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க
யாழ். நகரில் உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது இராணுவமே என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதை யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நிராகரித்துள்ளார்.


பயங்கரவாதிகளுடன் போரிட்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வட பகுதி மக்கள் வாழ்ந்த போது அங்கு மக்கள் பட்ட கஷ்டங்களை அறியாத அவர் மக்களுக்காக பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் இராணுவம் மீது வீண் பழி சுமத்துவது கவலையளிக்கிறது.

அவர் இப்படி கூறியிருக்கக் கூடாது. உதயன் பத்திரிகை தீப்பிடித்த சம்பவத்தை இன்று சிலர் அரசியலாக்கிக்கொண்டி ருக்கிறார்கள். அந்த அலுவலகத்தை தாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லை. இராணுவத்தின் பிரசன்னத்தை இன்று வெகுவாக குறைத்திருக்கிறோம்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை செய்து வருகின்றனர். விரைவில் உண்மை நிலை புலப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment