Friday, April 26, 2013

புதிய நெல்லினங்கள் இலங்கையில் அறிமுகம்!


Nel-Paddy
விவசாயத் திணைக்களத்தின் அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் புதிய நெல் வகைகள் 03 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


தி-t 306, தி-t 405, பாஸ்மதி வகை இரண்டும் மற்றும் தி-t 05 - 1382 நாடு என்பனவே இதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பிஸ்கட் உற்பத்திக்கும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை முக்கிய அம்சமாகும்.

இவற்றிலே திt 306 நெல் வகையானது 03 மாத வயதிற்கு உட்பட்டதாக விளங்குவதுடன் வெள்ளை நிறம் கொண்ட நறுமணம் வீசக்கூடிய ஒரு வகையாகவும் விளங்குகின்றது. திt 450 வகையானது ‘லங்கா சமுர்தி’ என்றழைக்கப்படுகின்றது. இவை நெல் மீது ஏற்படக்கூடிய பல்வேறு நோய் எதிப்புச் சக்தியை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

உயர் அறுவடையினை பெற்றுக்கெள்வ தற்கும், பிஸ்கட் உற்பத்திக்காக பயன்படுத்து வதற்கும் புதிய நெல் வகை பயன்படு கின்றது. புதிய நெல் வகை பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சிறந்த பெறுபேறினை பெற்றுக்கொள்வதே விவசாய அமைச்சின் நோக்கமாகும்.

அதற்காக நெல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment