புலி உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு நாட்டுக்குள் நடமாடுவதாக தென்பகுதி சிங்கள பத்திரிகை ஒன்று விசனம் தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடந்த காலத்தில் விடுதலைப்புலி போராளி எனவும், புணர்வாழ்வுக்கு செல்ல வேண்டிய இவர் தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதால் தனக்குரிய சிறப்புரிமையை வைத்துக்கொண்டுதான் வெளியே நடமாடுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் புலிகளுடனும் நல்லுறவை பேணி வந்தவர் எனவும புலிகளின் சிரேஸ்ட தலைவர் தீபனின் உறவினர் என புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன் சிறீதரன் சகோதரர் ஒருவர் புலிகளுக்கு ஆதரவான தமிழ்வின் லங்காசிறி மனிதன் ஆகிய இணையத்தளத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து நடாத்தி வருகின்றார் எனத் தெரிய வந்துள்ளதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் இருந்து இணையத்தளத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் பற்றிய தகவல்களையும் புலி எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தனி ஈழ இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment