இலங்கைக்கு தேவையானது காணி பொலிஸ் அதிகாரங்கள் அல்ல எனவும், பொருளாதார நல்லிணக்கமே இலங்கை தேவை எனவும், இலங்கை காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய நாடு கிடையாது என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.அதிகாரங்களை பரவலாக்குவதால் தேவையற்ற சட்டங்கள் மக்கள் மீது சுமத்தப்படும் எனவும், அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒரு வீட்டின் பிள்ளைகளாகவும் ஒரு தேசிய கீதத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment