யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது தங்கை முறையான சிறுமி ஒருத்தியை வல்லுறவு கொண்ட சம்பவம் ஒன்று சுமார் 5 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் பூசகரான வேபாலகண்ணா ரூபகண்ணா என்ற 27 வயதுடைய கள்ளச்சாமியார் தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் ஆலயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் உறவினரின் முறைப்பாட்டின்பேரிலேயே பொலிஸார் கைதினை மேற்கொண்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இதே நேரம் மாதம்பையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை விற்பனை செய்த மூன்று விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்த பொலிஸார் பல்வேறு இறுவெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் சம்பத்தப்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மாதம்பையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு, கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காண்பித்த நபர் ஒருவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் மூலம், இவ்விற்பனை நிலையங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகவயைடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், இவ்வர்த்தக நிலையத்திலிருந்து மூன்று கணனிகள், 41 இறுவட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. மூன்று சந்தேக நபர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபாச காட்சிகளை தரவேற்றம் செய்வதற்காக, இவர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக, சிலாபம் பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment