இலங்கையின் சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்காக, ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் 4000 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் எதிர்காலத்தில் 500 மில்லியன் ரூபாய்களை நிதி உதவியாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த அபிவிருத்தி பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், எதிர்வரும் 2014ம் ஆண்டு இந்த பணிகள் நிறைவடையும் என்றும் சுகாதார அமைச்சின் வேலைத்திடமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment