2012ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 119 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என வியன்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட் (ஐ.பி.ஐ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இவ்வமைப்பு பத்திரிக்கையாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அளிக்கிறது. இந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2012ஆம் ஆண்டில் மட்டும் பத்திரிக்கை உட்பட மீடியாக்களில் பணிபுரிபவர்கள் 119 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சிரியாவில் மட்டும் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அடுத்தபடியாக சோமாலியாவில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர.
மேலும் சிரியா மற்றும் சோமாலியா நாடுகள் ஊடகத்துறையினருக்கு ஆபத்தை விளைவிக்கும் நாடுகள் என்று வர்ணித்துள்ளது ஐபிஐ. இதற்கு அடுத்த இடங்களில் மெக்ஸிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 1997ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த படுகொலைகளிலேயே இதுதான் அதிகம் என்கின்றது ஐபிஐ.யின் அறிக்கை.

No comments:
Post a Comment