Friday, November 30, 2012

மாணவர்களுடன் சேர்ந்து மாவீரர் தினத்தை அடுத்த வருடம் கொண்டாடுவோம் -ஆசிரியர் சங்கம்

அடுத்த வருடம் மாணவர்களுடன் நாங்களும் சேர்ந்து மாவீரர் தினத்தைக் கொண்டாடுவோம் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்ட போராட்டத்தின் போதே இத்தகவலை ஆசிரியர் சங்கத்தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தில் மாணவர்கள் மட்டும் கொண்டாடியதால் தான் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த வருடம் மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தையும் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் கொணடாடுவார்கள் என்றார்..

No comments:

Post a Comment