Saturday, November 24, 2012

மினிபஸ் வடி வாகனம் விபத்து இருவர் படுகாயம் யாழில் சம்பவம்

யாழ்.மருதனார் மடத்தில் வடிவாகனமும் மினிபஸ்சும் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்றிரவு இரவு 7 மணியளவில் மருதனார் மடம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இதில் தெல்லிப்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினிபஸ்சும் சுன்னாகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வாகனமுமே மோதிக்கொண்டன.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்களுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் தொடர்பில் சுன்னாம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment