யாழ். பாஷையூர் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இலக்காகி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை ஒருவரையும் யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment