Sunday, December 30, 2012

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஊசி மருந்துக் குப்பிகளை தடைசெய்தது சுகாதார அமைச்சு

நாட்டில் சகல வைத்தியசாலைகளிலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ஊசி மருந்துக் குப்பிகளை பாவனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. களுபோவில போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்துக் குப்பியொன்றிலிருந்து கண்ணாடித் துண்டுடொன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

குறித்த தொகுதி சார்ந்த ஊசி மருந்துக் குப்பிகளை பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

'கண்டு பிடிக்கப்பட்ட மருந்தினைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக குறித்த தொகுதி மருந்துகளை அனுப்பிவைத்துள்ளோம்' என அதிகாரியொருவர் கூறினார்.

No comments:

Post a Comment