Sunday, December 30, 2012

பாதிக்கப்பட்ட கிளிக்கு டான் யாழ்ஒளியின் உதவிகள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாண மக்களிடம் டான் யாழ்ஒளி தொலைக்காட்சி பெற்றுக்கொண்ட பொருட்கள் மற்றும் ஆளுனரால் வழங்கப்பட்ட உதவிகளை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை மீட்பதற்கான உடனடிச் செயற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மாவட்ட செயலகமும் இணைந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1252 குடும்பங்களைச்சேர்ந்த 4447 நாலாயிரம் பேர்வரை நலன்புரிநிலையங்களில் தங்ககவைக்கப்பட்டு பாராமரிக்கப்படுவதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அதிகபாதிப்புக்களை கண்டாவளைப்பிரதேசம் எதிர்கொண்டுள்ளது.

கண்டாவளைப்பிரதேசத்தில் மட்டும் 16 நலன்புரி நிலையங்களில் எண்ணூறுவரையான குடும்பங்கள் தங்வைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த கால போர் அனர்த்தத்தை எதிர் கொண்ட எம்மக்கள் தம்மை மீளவும் தமது நிலையை மீள் நிலைப்படுத்திக் கொண்டு வரும் போது வரட்சி, வெள்ளம் என தொடர்ச்சியான இயற்கை பாதிப்புக்களையும் எதிர் நேக்கியுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் மக்களின் அவலங்களை காரணமாக்கி வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை எனவே எம் மக்களின் நலன்களுக்காக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்படும் உதவிகள் முழுமையாக மக்களிடம் சென்றடைவதை புலம்பெயர் உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நேற்றைய தினம் வடமாகாண ஆளுனர் அவர்கள் தலா எண்நூறு ரூபா பெறுமதியான ஆயிரம் உணவுப்பொதிகளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வளங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டான் யாழ் ஒளி தொலைக்காட்சி சேவையினரும் அரசஅதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உதவிகளையும் வளங்கியதுடன் இந்த வினையோக பணிகளில் சிகரம் ஊடக நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்பட்டனர்.

No comments:

Post a Comment