(கலைமகன் பைரூஸ்) வீதியில் மனைவி வேண்டாம் என்று கதறக் கதறக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் கணவன் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொச்சிக்கடை, வெலியேன 18 ஆம் கட்டை பிரதேச வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை, மோலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ரேகிணி துஷாரி என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு பூதகரமானதன் விளைவாகவே இக் கொலை இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

No comments:
Post a Comment