Wednesday, February 27, 2013

போங்கடா போங்க ஹலாலாவது இன்னுமொன்றுமாவது?



புர்கா ஆடை ஒரு பயங்கரவாத ஆடையே - சூட்சுமமாய்ச் சொல்கிறார் முஸம்மில்

இஸ்லாமியப் பெண்களால் முழு உடம்பும் மூடும்படியாக அணிகின்ற புர்கா ஆடை, மத பயங்கரவாதத்தைக் காட்டக்கூடியதான்றாகும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இவ்வாறான ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை எனக் குறிப்பிடுகின்ற முஸம்மில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரோ பங்களாதேஷின் பிரதம மந்திரியோ, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரோ இந்த சாக்குப்பை ஆடையைப் பயன்படுத்துவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் சில அடிப்படைவாதிகளே இதனை நடைமுறைப் படுத்திவருகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஹலால் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர், புனித அல்குர்ஆன் எந்தவொரு இடத்திலும் அநியாயமாகப் பொருளீட்டச் சொல்லவில்லை. ஹலால் என்பது அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் வாழ்வியல் முறையொன்றாகும். அவ்வாறன்றி எந்தவொரு இயக்கத்தினதும் சொந்தக் கருத்தல்ல என்பதையும் அறிவுறுத்தினார்.

(கேஎப்)

No comments:

Post a Comment