Thursday, February 21, 2013

காணிகளை வெளிநாட்டவருக்கு விற்க முற்றாக தடை

வெளிநாட்டவர்களுக்கு அரச, தனியார் காணிகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நேற்று (21.02.2013) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டி கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில். காணிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த புதிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாகக் கூறினார்.

இந்த புதிய சட்டதிட்டத்திற்கு அமைய வெளிநாட்டவர்கள் இலங்கையில் அரச அல்லது தனியார் காணிகளைக் கொள்வனவு செய்ய முடியாது. எனினும். பொருளாதார அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நீண்டகாலத்துக்கு காணிகளை குத்தகைக்கு எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். எனினும் உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் இராஜதந்திர கட்டடங்களுக்கான காணிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment