பதின்ம வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் குற்றவாளியாக இனங்காணப் பட்டு 6 மாத காலசிறைத் தண்டனையை விதித்த ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா , அதனை 5 வருடத்துக்கு ஒத்திவைத்தது நீதிமன்று.2009 ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமி மீதான துஷ்பிரயோக முயற்சி நடைபெற்ற குற்றச்சாட்டில் புங்குடுதீவு, 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்பிரட் டக்ளஸ் பெர்னான்டோ என்பவர் பொலி ஸாரினால் கைது செய்யத பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர் நீதிமன்றில்.
குற்றவாளியான சந்தேகநபர், தான் சுற்ற வாளியென்று மன்றில் தெரிவித்ததால் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் குற்றவாளியாக இனங் காணப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு நேற்று(27.02.2013) தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்னம் அவருக்கான தண்டனையை 5 வருடங்களுக்குத் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் காலப்பகுதியில் குறித்த குற்றவாளி மீண்டும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடுவாராயின், அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment