Monday, June 3, 2013

1.2 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான புலிகளின் உடைமைகள் அரசுடைமையாக....

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சொந்தமான ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு குறிப்பிடுகிறது.

அந்தச் சொத்துக்களில் இடம், வீடுகள், வாகனங்கள்,வங்கிக் கணக்குகளை அச்சிடும் அச்சகம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்கள் உள்ளடங்குவதாகவும், அவற்றில் பெரும்பான்மையானவை கொழும்புக்கு வெளியே இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிடுகின்றது.

விசேடாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூபா 85 மில்லியன் தொகையை சென்ற வருட இறுதிப் பகுிதியில் கண்டுபிடித்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் இந்நாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் அந்தக் கணக்குகளிலிருந்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எல்.ரீ.ரீ. ஈ இயக்கத்தினருக்குச் சொந்தமான இடங்களில் பெரும்பாலானவை கொழும்புப் பிரதேச இடங்களென்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்துகின்றது. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, கொள்ளுப்பிட்டிய, கொழும்பு, கொட்டஹேன, கிரேண்ட்பாஸ் கட்டுநாயக்க, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான இடங்கள் இருந்து, அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், இன்னும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எதிர்வரும் காலங்களில் கண்டுபிடிக்கப்படவுள்ளன எனவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(கேஎப்)

No comments:

Post a Comment