சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மேலும் 8000 இலங்கை பணியாளர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.அத்துடன் சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதற்காக சவூதி அரசாங்கம் பொது மன்னிப்புக்காலம் ஜுலை 3 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அதனை நீடிப்பது குறித்து சவூதி அதிகாரிகளுடன் பேச உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பணியாளர்களுக்கு நாடு திரும்புவதற்காக விஸா பெற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாகவும் அதுவரை அவர்கள் தாம் தங்கியுள்ள இடங்களிலே தங்கியிருக்குமாறு அறிவித்துள்ளதாகவும் சில பணியாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரை சவூதி அரேபியாவில் இருந்த சுமார் 2200 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment