Thursday, June 27, 2013

சிங்கள ராவய அமைப்பினரின் மாடு அறுத்தலுக்கெதிரான பாதயாத்திரை நிறைவு!! கடைகளில் வைக்கப்பட்டிருந்த ......!

மாடு அறுத்தலை தடை செய்தல் உட்பட ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரொன்று சிங்கள ராவய அமைப்பினரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கோரி சிங்கள ராவய அமைப்பினரால் கடந்த வாரம் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரையினை ஆரம்பித்திருந்தனர்.

பாணந்துரையிலிருந்து அலரிமாளிகை வரை காலிவீதியால், இவர்கள் பாதையாத்திரையாக வந்ததையடுத்து, பம்பலப்பிட்டிப் பகுதியிலுள்ள முஸ்லிம் உணவகங்களுக்கு சென்ற பொலிஸார் கடைகளில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி உட்பட, அனைத்து இறைச்சி வகைகளை ஒளித்து வைக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் அறிவித்தலை அடுத்து பம்பலப்பிட்டி சந்திப்பகுதியில் அமைந்திருந்த உணவகங்களில் பொறித்த கோழி இறைச்சி உட்பட அனைத்து இறைச்சி வகைகள் ஒளித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

No comments:

Post a Comment