24ம் திகதி துங்கிந்தை ஆதி விநாயகர் ஆலய அருகாமையில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். 25 ஆம் திகதியன்று ஸ்ரீ பேச்சியம்மனுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். மாவிளக்குப் பூஜை, கஞ்சி காய்ச்சுதல் என்பனவும், அதைத் தொடர்ந்து சாயரட்சைப் பூஜை மற்றும் வைரவர் பூஜையுடன் மஹோற்சவம், இனிதே நிறைவு பெறும்.
இம் மஹோற்சவக் கிரியைகள் அனைத்தும் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் பிரதம குருவான சிவ ஸ்ரீ ஆர்.பி. சாமிக்குருக்கள் தலைமையில், ஆகம விதிப்படி இடம் பெறும்.
இவ் உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் பரிபாலன சபையினர் துரிதமாகச் செய்துவருகின்றனர்.

No comments:
Post a Comment