Monday, July 22, 2013

குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டாராம்...!(?)

குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது தெரிவித்துள்ளார்.

தான் முழு மனதுடன் கிறிஸ்தாவ மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந் நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக தான் கொல்லப்படலாம் என்றும் மன்னர் தெரிவித்துள்ளார்.

இவரது அறிவிப்பு குவைத் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சில தமிழ் இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. முகநூலிலும் செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. என்றாலும், இதில் எந்தவித உண்மையும் இல்லையென குவைட்டில் பணிபுரியும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருமார்களும், அங்கு பணியாற்றுபவர்களும், கல்வியியலாளர்களும் குறிப்பிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவிடயமாக சிலர் இலங்கைநெற்றைத் தொடர்பு கொண்டு இதன் அசல் தன்மையை எடுத்துக்கூறினர். சிலர் முகநூலில் இந்த விடயத்தைக் கண்டு பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அவற்றில் ஒன்றிரண்டை நாம் எமது வாசகர்களுக்காகத் தருகின்றோம்.

1. முஸ்லிம் சகோதரர்களின் கவனத்திற்கு!

குவைத் மன்னர் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டார் என்ற பொய்ச்செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்பிவிட்டிருக்கின்றார்கள்! இந்தவிடயமாக face book ல் பதிவு செய்பவர்கள் அவதானமாக செய்திகளை பயன்படுத்தவும்! நான் குவைதில்தான் இருக்கின்றேன்,இங்கு அப்படியான ஒரு பேச்சுக்கே இடங்கிடையாது என்பதையும் தெரிவிக்கின்றேன்! 2012-01-25 லும் 2013-07-23 லும் ஒரேமாதிரியான இந்த பொய்ச்செய்தியை VATICAN INSIDER என்ற ஒரு பத்திரிகையில் காட்டப்பட்டிருக்கிறது!

மௌலவி அமீர்ஹுஸைன் (குவைட்டிலிருந்து)

2. Eksaar எக்சார்

குவைட் மன்னர் அப்துல்லா அல்ஷபா கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்று சிலர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். (சில தமிழ்மொழி இஸ்லாமிய இணையங்களும் இச்செய்தியை வெளியிட்டுவருகின்றன.)

முதலில் குவைட் மன்னரின் பெயரை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஷபா அல் அஹமட் அல் ஜாபர் அல் ஷபா என்பதே மன்னரின் பெயராகும். குறித்த செய்தியைப் பகிர்கின்றவர்கள் இந்த அப்துல்லா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.

இந்தச் செய்தி 2012 ஆம் ஆண்டில் ஷீயா இணையத்தளங்களில் பகிரப்பட்டது எனவும் ஓடியோ கிளிப் ஓடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அப்துல்லா என்ற பெயர் பலருக்கு இருக்கும் நிலையில் அரச குடும்பமான ஷபாவை இணைத்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அரபுக்களின் பெயர் நீளமானதாகவும் அவர் யாருடைய மகன் என்பது உட்பட்ட பல தகவல்களைக் கொண்டதாகவும் அமைகையில் வேண்டுமென்றே மக்களைக் குழப்ப ஒரு அடையாளம் காணமுடியாத பெயரில் இந்த ஓடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. ஏன் அவர் ஓடியோ வெளியிடவில்லை என்ற கேள்வி இங்கு எழுப்பத்தக்கது.

No comments:

Post a Comment