Tuesday, July 23, 2013

நடிகை மஞ்சுளா காலமானார்

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று(23.07.2013) மரணம் அடைந்தார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும்., நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் படுக்கை அறைக் கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுகையில் கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment