நமது நாடு சுதந்திரம் அடைய, நம் முன்னோர்கள் எண்ணற்றோர் உயிர் தியாகம் அப்படி, உயிர் தியாகம் செய்து வெளிநாட்டவரிடம் இருந்து சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு வெளிநாட்டவரை அமர வைப்பது, இந்த நாட்டில் உள்ள 100 கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றே ஆகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சோனியாவை பிரதமராக தெரிவு செய்தால் மக்களின் உணர்வுகளை பெரிதளவில் பாதிக்கும் எனவும் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி யாகவும் இந்திராகாந்தியின் மருமகளாகவும் மட்டுமே நமது அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளார். சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரை மரியாதையுடன் பார்க்கிறோம். ஆனால், இந்தியாவின் பிரதமராக வர விரும்பினால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விழா ஒன்றில் கலந்த கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment