Tuesday, September 24, 2013

மிதி வெடியில் சிக்கியது உழவு இயந்திரம்; ஒருவர் பலியாகி இருவர் காயம்

முகமாலையில் உழவு இயந்திரமொன்று இன்று செவ்வாய் க்கிழமை மிதி வெடியில் சிக்கியதில் ஒருவர் பலியாகிய துடன் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அல்லிப் பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாடசாலை சென்ற மாணவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!

யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாண வனை காணவில்லை என பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவன் காணாமல் போனது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்!

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றில் சென்ற மூவர் சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதுடன் இந்த நபர்கள் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் குறித்த சிறுமியை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

நடு வீதியில் நின்ற சிறுமியை கண்ட பிரதேச வாசிகள் சிறுமியிடம் விசாரணையை மேற்கொண்டபோது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்ததை தொடரந்து பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித் துள்ளனர்.

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்பு நிகழ்வுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக் கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக் கிடையிலான முன்வைப்பு நிகழ்வு சென்ற 14 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம், ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரியும் இந் முன்வைப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்பாட சாலை சார்பாக அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம், ஆசிரியர்களான எம்.எம். விஜிலி, எம்.எஸ். சிறாஜ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஏ.எம். தாஹாநழீம்)

49 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலை யில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர். சட்டவிரோத குடியேற்றகாரர்களை மலேசிய அதி காரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கி யிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர்.

இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர். வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை, மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியை இராஜினாமாச் செய்கிறார் தி.மு..! முதலமைச்சராகின்றார் தி.மு மைந்தன் அநுராத!

மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மைந்தன் அநுராத ஜயரத்னவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதிகூடிய விருப்பு வாக்குகளில் இரண்டாம் இடத்தில் நிற்கின்ற முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்காக வேண்டி, பிரதமர் தி.மு. ஜயரத்ன தனது மந்திரிப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பிரதமரின் இராஜினாமாவோடு வெற்றிடமாகுகின்ற இடத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பது மற்றும் சரத் ஏக்கநாயக்கவுக்கு அமைச்சரவையில் அமைச்சுப் பதவியொன்று வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க, பிரதமரின் மகன் அநுராத ஜயரத்ன, ஜனாதிபதி இலங்கைக்கு வந்தவுடனேயே சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஷ்ஷெய்க் அஸ்மினுக்கா???

வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை பெயரிடு மாறு அந்தக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது

வெற்றிபெற்ற கட்சிகளுக்கு இரண்டு போனஸ் ஆசனங் கள் வீதம் மூன்று மாகாணங்களிலும் ஆசனங்கள் கிடை க்குமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார் இதற்காக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரண்டு உறுப்பினர்களை பெயரிட முடியுமென தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டி யுள்ளது.

ஆயினும் போனஸ் ஆசனங்களுக்காக நியமிக்கப்படும் உறுப்பினர்களை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் மற்றய ஆசனத்தை த.தே.கூட்டமைப்பின் பெண்ணொருவருக்கு வழங்கப்படலா மெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன