வடமாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான வெற்றியென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ பயங் கரவாதத்திற்கெதிரான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.இந்நிலையில் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப் படுத்தும் வகையில், தேர்தல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியத்தும் வாயந்ததென ஹிந்து செய்தித்தாளின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுதந்திரமாகவும், அமைதியாகவும் தேர்தல் இடம்பெற்றுள்ளமைக்கு சிறந்த உதாரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளமையாகும் எனவும் சூத்திரதாரிகளின் பிடியில் சிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment