Wednesday, September 18, 2013

மொத்த தமிழ் இனத்தையும் அழிக்கும் வேலையிலா விக்னேஸ்வரன் ஈடுபடுகின்றார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர் தலுக்கான முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்து இன ஐக்கியத் தையும், சமாதானத்தையும் சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள் ளார்கள்.

த.தே கூட்டமைப்பின் வேட்பாளர் விக்னேஸ்வரன் எமது மக்களுக்கு தேவையில்லாத இராணுவம் எங்கள் மக்களை அடக்கி ஆள்வதற்காக இங்கு இருக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எனது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்தால் நாம் இராணுவத்தினரை எமது பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவோம் எனவும் மாகாண சபைச் சட்டங்களின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காமல் விடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் எமக்கு அதிகாரங்களை வழங்க மறுத்தால் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்திருக்கும் திரு. விக்னேஸ்வரன் இதுபற்றி நாம் சர்வதேச சமூகத்திற்கு அறிவிப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இவ்விதம் ஆயுதப் போராட்டம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கு தூபமிடக்கூடிய வகையில் திரு. விக்னேஸ்வரன் அரசியல் மேடைகளில் பேசுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் மக்களிடையே வலுப்பெற்றுள்ள நல்லிணக்கப் பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் இன்று சமாதானம், அபிவிருத்தி, தங்களுக்கு தேவையான வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கையையே விரும்பு கிறார்கள். மீண்டும் புலிபயங்கர வாதிகளின் கீழ் தாங்கள் அனுபவித்த துன்பகரமான வாழ்க்கையை அவர்கள் வெறுக்கிறார்கள். எமக்கு சமாதானம் தான் அவசியம். சமாதானத்தை சீர்குலைக்க முயற்சி எடுக்கும் அனைவரையும் நாம் எதிரிகளாகக் கருதி விரட்டி அடிப்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் குறிப்பாக வட மாகாணத்தில் யுத்தத்தினால் கடந்த 30 ஆண்டு காலம் துன்பம் அனுபவித்த மக்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த மனோநிலையில் உள்ள அப்பாவி வட மாகாண தமிழ் மக்களிடம் விக்னேஸ் வரனின் இந்த வீராவேசத்துடனான பேச்சு என்றும் எடுபடப் போவதில்லை. தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் தென்னி லங்கையைச் சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மனதில் விக்னேஸ்வரன் தெரிவிக்கும் கொடிய கருத்துக்கள் பெரும் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துவதையும் எவராலும் தடுக்க முடியாது.

சமாதானம் திரும்பிய வடமாகாணத்தில் அநாவசியமாக இராணு வத்தை தொடர்ந்தும் வைத்திருப்பது தவறு இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது. இராணுவம் எங்களை அடக்கி ஆள இங்கே இருக்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வந்தால் இராணுவத்தை வெளியேற்று வோம். இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்தால் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சென்று முறையிடுவோம் என்று திரு. விக்னேஸ்வரன் தெரிவிக்கும் கருத்து உண்மையிலேயே சமாதானத்தை விரும்பும் மக்கள் மனதை துன்புறுத்துவதாக அமைந்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டு காலத்தில் வடமாகாணம் இந்த அளவிற்கு அபிவிருத்தி அடைந்து நல்ல வளமான பிரதேசமாக மாறி இருப்பதற்கு இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பே காரணமாகும். இராணுவத்தினர் முன்வந்து ரயில் பாதைகளில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை 2 ஆண்டு களுக்குள் முற்றாக அகற்றாமல் இருந்தால் இன்று கிளிநொச்சி வரை ரயில் சேவையை நீடித்திருக்க முடியுமா?

புலி பயங்கரவாதிகளுக்கு பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு 2009ம் ஆண்டு மே மாதத்தில் அரச தரப்புக்கு தப்பி யோடிவந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களா அபயமளித்தார்கள்?

அவர்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான நீரையும், உணவையும், உடைகளையும் தங்கியிருப்பதற்கு வசதியான இருப்பிடங்களையும் இராணுவத்தினர் தான் அன்று பெற்றுக் கொடுத்தார்கள். அதனால் தான் உள்ளூரில் இடம் பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக இருந்து இன்று மீண்டும் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களின் சுயநலப் போக்கை அவதானித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னிலங்கையில் நிரந்தரமாக வாழ்ந்து கொண் டிருக்கும் சீ.வி. விக்னேஸ்வரனை தமிழ்தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதன்மைவேட்பாளராக தெரிவு செய்ததன் மூலம் வடபகுதி மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள். வடக்கில் விக்னேஸ்வரனை விட கல்விமான்களோ, அறிஞர்களோ, பண் பட்ட அரசியல் வாதிகளோ, சமூகத் தலைவர்களோ இல்லையா? என்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக்கூட் டத்தில் உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.

இதேவேளையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச் சரான நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டைப் பிரிப்பதற்கு அடித்தளமாக அமைவதாக இருந்தால் அதனை சீராக்கும் மருந்து அரசாங் கத்திற்கு இருக்கிறது என்று கூறி இவ்வித பிரிவினைவாத முயற் சிகளை அரசாங்கம் அடக்கிவிட தயங்காது என்பதை எடுத்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment