Wednesday, September 18, 2013

தேசிய அணியில் இணைந்து கொண்டனர் மன்னார் புனித சவேரியார் மாணவர்கள்!

ஆசிய கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட போட்டி ஜோர்தானில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் இலங்கை தேசிய அணியில் இந்த மன்னார் மாவணர்கள் மூவரும் இடம்பிடித்துள்ளனர்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் மாணவர் களான ஜே.யோண்சன், இ.எஸ்.சஜிவன், இ.எஸ்.கிசோர் ஆகிய மூவருமே ஜோர்தான் செல்லவுள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் தேசிய அணியில் முதற் தடவையாக இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment