Friday, November 2, 2012

சட்டவிரோதமாக கஜமுத்து வைத்திருந்த மூவர் கைது

பல லட்சம் ரூபா பெறுமதியான யானையின் கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த மூவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் யாழ்.ஐந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல லட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜமுத்துக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்கள் மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment