பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை ஒன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் இலங்கை அரசியலமைப்பின் 107- 02 ஆம் சட்டவிதிக்கு இணங்க இந்த குற்றப்பிரேரணையை ஆளும் கட்சி அமைச்சர்கள் ஐவர் சபாநாயகரிடம் கையளித;தனர்.
பிரதம நீதியரசர் தமது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இந்தக் குற்றப்பிரேரணையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக மொத்தம் 117 பேர் இப்பிரேரணையில் கையொப்பமி;ட்டுள்ளனர்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனக் கோரும் இந்த குற்றப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின்; உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி கோரிக்கை விடுத்தார்
அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி- பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார- அருந்திக்க பெர்னாண்டோ- சுதர்ஷினி பெரனாண்டோ புள்ளே ஆகிய ஐவரும் இந்த குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment