Monday, December 3, 2012

யாழ்.பல்கலைக்கழக சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணை- அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அசாதாரண சம்பவங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்தகால யுத்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்னடைவு கண்டிருந்தது.

இது தற்போது படிப்படியாக சீர்செய்யப்பட்டு முன்னேறிவரும் நிலையில், அமைதிச் சூழலில் மேற்கொள்ளப்பட்டு வந்த யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளைக் குழப்பும் செயற்பாடுகள் இனிமேலும் குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது.

எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதும், தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக்குவதும் அவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடுவது இந்த சமூக நலன் விரோத சக்திகளின் தொடரும் செயற்பாடுகளாகி உள்ளன.

இவ்வாறான விசமிகளின் தூண்டுதல்கள் காரணமாகவே பல்கலைக்கழகத்திலும் பதற்ற நிலைமை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment