Monday, December 24, 2012

யாழில் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்!

யாழ். நீர்வேலி பகுதியில் இன்று(24.12.2012) நடைபெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கெங்காதரன் (வயது 45) அவரது மனைவி சனாதினி (வயது 42) மற்றும் அவர்களின் பிள்ளைகளான சங்கவி (வயது 10), கவிதரன் (வயது 7) நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலி கரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வர் மீது கன்டர் ரக வாகனமொன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதுடன் இது தொடர்பில் மேலதிக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment