இலங்கைக்கு எதிராக வலுவான ஒரு தீர்மானத்தை முன்வைக்குமாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான கத்தோலிக்க மதகுருமார் குழு ஒன்று ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. மன்னார் ஆயர் உட்பட மதகுருமார்களும் அருட்சகோதரிகளுமாக 133 பேர் கையெழுத்திட்டு கடிதம் மூலமாக இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருப்பதாக பிரித்தானியச். செய்தி சேவையென்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த முறை நிறைவேற்றப்பட்ட மென்போக்கான பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றுவதற்குரிய அரசியல் ஆர்வமின்மையையே நாங்கள் அரசாங்கத் தரப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது.
'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதற்கான ஆணையாளர் ஒருவரை நியமித்தல் போன்ற விடயங்கள் கவனிக்கப்படவில்லை.
இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் கையளித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல், தேசிய மொழிப்பயன்பாடு போன்றவை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பரிந்துரைகள் மீறப்பட்டிருப்பதையும் நேரில் நாங்கள் கண்டு வருகின்றோம்'
ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கை ஆகியவற்றுடன் இத்தீமானம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment