
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓய்டுன் ஐஸே மிகளிக் வாழ்ந்து வந்தார். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் 2010-ம் வருட இறுதியிலும், 2011-ம் ஆண்டு தொடக்கத்திலும் 3 முறை பாகிஸ்தானுக்கு இணையம் மூலம் 2050 அமெரிக்க டாலர்கள் அனுப்பியது தெரிய வந்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு பணம் வழங்கியதாக குற்றம் சாட்டி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பிற அமெரிக்கர்களையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கதுடன் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பினார் என்ற அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் குற்றச்சாட்டு ஒப்புவிக்கப்பட்டது.
வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்துகொண்டு பாக்கிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு துருக்கி பெண் பணம் வழங்கினார் என்றபோது 5 வருட தண்டனை வழங்கிய அமெரிக்கா, அமெரிக்காவிலிருந்துகொண்டு புலிகளுக்கு அலோசகராக இருந்தவரும் தற்போது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவருமான ருத்திரகுமாரனுக்கு இவ்வாறான தண்டனையை வழங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
அத்துடன் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியோருக்கு என்ன தண்டனை வழங்கப்போன்றது.








.jpg)


.jpg)













.jpg)







.jpg)
.jpg)

