Thursday, March 28, 2013

அம்மா ஐபிஎல் ஐ அரசியல் ஆக்க முற்படாதீங்கோ , ஆட்சி பறிபோய்விடும். ஜே க்கு சுப்ரமணியசுவாமி.

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகுமென ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழ தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாதென்று இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தில் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment