பதினொரு மாதப் பெண் குழந்தையை வன்மையாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளவருக்கு களுத்துறை உயர்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார்.அத்தோடு, 20,000 ரூபா அபராதமும்,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட குழந்தைக்கு வழங்குவதற்காக ரூபா 7 இலட்சம் அபராதத் தொகையும் வழங்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். பேருவளையைச் சேர்ந்த அஹமட் மீரா அப்துல் ஹஸன் என்பவரே மேற்படி குற்றவாளியாகியுள்ள நபராவார்.
குற்றவாளி 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி குழந்தையின் யோனித் துவாரத்தில் விரலைவிட்டு மிக்க் கொடூரமான முறையில் பாலியல் வன்புறவு செய்துள்ளதாக நீதிபதியால் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளி குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. என்றாலும், களுத்துறை நாகொட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி சுனில் குமார குழந்தை கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் சாட்சியளித்தார்.
குறித்த அபராதத் தொகையை வழங்காதவிடத்து, அதிஉயர் தண்டனையுடன் மூன்று வருட அபராதத்தை விதிக்குமாறும் நீதிபதி கட்டளைபிறப்பித்துள்ளார். அரச வழக்கறிஞர் நதீ அபர்ணா வாதியின் தரப்பில் வாதாடினார்.
(கேஎப்)
No comments:
Post a Comment