
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய திலாவை வடகண்டம் போன்ற பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த வயற்காணிகளில் ஏறக்குறைய 1000 ஏக்கர் அளவில் வனவியல் எல்லைக்குட்பட்ட காணி எனும் பேரில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் சுவீகரிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.புஸ்பகுமார் அவர்களிடம் முறையிட்டனர். மக்களின் முறைப்பாட்டையடுத்து வனப்பாதுகாப்பு அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண ஆளுனர் ஆகியோருடன் இனியபாரதி; உரையாடியதையடுத்து மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இன்று ( 25.06.2013 ) மாலை 3.00 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வனப்பாதுகப்பு அதிகாரிகளை அழைத்த இனியபாரதி திருக்கோவில் பிரதேச செயலாளர் சகிதம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அங்கு பிரதேச மக்களின் காணிக்கான ஆவனங்கள் காண்பிக்கப்பட்டது.
ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் 1000 ஏக்கர் நிலத்தையும் மக்களுக்கு மீளளிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக அம்பாறை மாவட்ட வனப்பாதுகாப்பு பொறுப்பதிகாரி வாக்குறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment