வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங் களை துரிதமாக நிரப்புவதற்காக குறைந்தபட்ச தகுதியை கொண்டோர் உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. இதனால் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமை கொண்டோரை இனங்காணுவது இலகுவான விடயமல்ல. இதுவொரு யதார்த்தமான உண்மை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுள்ளோர் இல்லாவிட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதனிலும் பார்க்க குறைந்த கல்வி தகைமை உள்ளோரை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன் அவர் தெரிவித்துள்ளார்
மேலும், இவர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், இது தொடர்பான தகவல்களை அனுப்புமாறு நாங்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும், எதிர்காலத்தில் எப்படியாவது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment