இங்கிலாந்து இளவரசி குடும்பத்தினரின் அரண்மனை இரகசியத்தை வெளியிட்டதாக கருதி, தற்கொலை செய்துகொண்ட தாதியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கருதப்படும் அவுஸ்திரேலிய வானொலியான 2டே எப்.எம். இன் நிகழ்ச்சித் தொகுப்பாளரான மைக்கேல் கிறிஸ்டியன் என்பவர் அந்நாட்டின் சிறந்த நிகழ்சிசி தொகுப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அவுஸ்திரேலிய வானொலியான 2டே எப்.எம்.-இல் பணியாற்றிய போது, இங்கிலாந்து இளவரசியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக இளவரசியின் குடும்பத்தார் போல மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், அந்த அழைப்புக்கு பதில் சொன்ன இந்திய வம்சாவழி தாரி ஜெசிந்தா, பின்னர் அது வானொலி நிகழ்ச்சி என்று தெரிந்து கொண்டதால் அரண்மனை இரகசியத்தை வெளியே சொல்லிவிட்டதாக கருதி, சிலதினங்கள் கழித்து தற்கொலை செய்வதற்கும் காரணமாக குறித்த நபரே இருந்தார் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இத்தற்கொலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்த மைக்கேல் கிறிஸ்டியன் என்பவர் தற்போது மெல்போர்னில் இயங்கிவரும் ஃபாக்ஸ் வானொலி நிறுவனத்தின் காலை நிகழ்ச்சிகளை வழங்கும் முக்கிய தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரை ஆஸ்டிரியோ நிறுவனம சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக தெரிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்டீபன் கோன்ராய் கருத்து தெரிவிக்கையில், சூழ்நிலையினால் கொடுக்கப்பட்டுள்ள இந்த விருது மலிவான இரசனையைக் கொண்டுள்ளது என்றும், இவர் வெளியிட்ட செய்தியினால் ஏற்பட்ட விபரீதம் நடந்த சிறிது காலத்திற்குள்ளாகவே இதற்காக விருது அளிப்பது என்பது மிகவும் இழிவான இரசனையாகும் என்றும்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment