Tuesday, September 24, 2013

மிதி வெடியில் சிக்கியது உழவு இயந்திரம்; ஒருவர் பலியாகி இருவர் காயம்

முகமாலையில் உழவு இயந்திரமொன்று இன்று செவ்வாய் க்கிழமை மிதி வெடியில் சிக்கியதில் ஒருவர் பலியாகிய துடன் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அல்லிப் பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாடசாலை சென்ற மாணவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!

யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாண வனை காணவில்லை என பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவன் காணாமல் போனது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்!

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றில் சென்ற மூவர் சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதுடன் இந்த நபர்கள் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் குறித்த சிறுமியை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

நடு வீதியில் நின்ற சிறுமியை கண்ட பிரதேச வாசிகள் சிறுமியிடம் விசாரணையை மேற்கொண்டபோது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்ததை தொடரந்து பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித் துள்ளனர்.

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்பு நிகழ்வுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக் கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக் கிடையிலான முன்வைப்பு நிகழ்வு சென்ற 14 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம், ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரியும் இந் முன்வைப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்பாட சாலை சார்பாக அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம், ஆசிரியர்களான எம்.எம். விஜிலி, எம்.எஸ். சிறாஜ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஏ.எம். தாஹாநழீம்)

49 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலை யில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர். சட்டவிரோத குடியேற்றகாரர்களை மலேசிய அதி காரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கி யிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர்.

இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர். வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை, மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியை இராஜினாமாச் செய்கிறார் தி.மு..! முதலமைச்சராகின்றார் தி.மு மைந்தன் அநுராத!

மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மைந்தன் அநுராத ஜயரத்னவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதிகூடிய விருப்பு வாக்குகளில் இரண்டாம் இடத்தில் நிற்கின்ற முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்காக வேண்டி, பிரதமர் தி.மு. ஜயரத்ன தனது மந்திரிப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பிரதமரின் இராஜினாமாவோடு வெற்றிடமாகுகின்ற இடத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பது மற்றும் சரத் ஏக்கநாயக்கவுக்கு அமைச்சரவையில் அமைச்சுப் பதவியொன்று வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க, பிரதமரின் மகன் அநுராத ஜயரத்ன, ஜனாதிபதி இலங்கைக்கு வந்தவுடனேயே சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஷ்ஷெய்க் அஸ்மினுக்கா???

வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை பெயரிடு மாறு அந்தக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது

வெற்றிபெற்ற கட்சிகளுக்கு இரண்டு போனஸ் ஆசனங் கள் வீதம் மூன்று மாகாணங்களிலும் ஆசனங்கள் கிடை க்குமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார் இதற்காக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரண்டு உறுப்பினர்களை பெயரிட முடியுமென தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டி யுள்ளது.

ஆயினும் போனஸ் ஆசனங்களுக்காக நியமிக்கப்படும் உறுப்பினர்களை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் மற்றய ஆசனத்தை த.தே.கூட்டமைப்பின் பெண்ணொருவருக்கு வழங்கப்படலா மெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஜே வி பி செய்வதை சரத் பொன்சேகாவினால் செய்யமுடியாது!

ஜே.வி.பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித் துள்ள கருத்து தொடர்பிலேயே வாசுதேவ தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜே வி பி எதிர்க்கட்சியாக செய்யவேண்டிய பணிகளை செய்கிறது சில வேளைகளில் தடம்மாறிக்போகிறது எனினும் சரத் பொன்சேகா ஊழலை ஒழிக்கப் போவதாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாகவும் கூறுகிறார் இது சாத்தியப்படாத விடயம் என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்

சூத்திரதாரிகளின் பிடியில் த.தே.கூ சிக்க கூடாது!

வடமாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான வெற்றியென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ பயங் கரவாதத்திற்கெதிரான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.

இந்நிலையில் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப் படுத்தும் வகையில், தேர்தல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியத்தும் வாயந்ததென ஹிந்து செய்தித்தாளின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திரமாகவும், அமைதியாகவும் தேர்தல் இடம்பெற்றுள்ளமைக்கு சிறந்த உதாரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளமையாகும் எனவும் சூத்திரதாரிகளின் பிடியில் சிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரால் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் - கந்தபளையில் சம்பவம்!

பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் நுவரெலியா கந்தபளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இது குறித்து கந்தபளை பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக் கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக தெரிவித்தே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையின் அறிக்கையை சரிசெய்யுமாறு இதுவரை எழுத்துமூலம் இல்லை....!

இலங்கை உத்தியோகபூர்வ சுற்றுலா மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவரது சுற்றுலாவின் போது, கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் உள்ள டீ.எஸ். சேனாநாயக்காவின் உருவச் சிலையை அகற்றுமாறு குறிப்பிட்ட அறிக்கையை சரிசெய்யுமாறு கோரி ஐக்கிய நாடுகள் அமையகத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் இலங்கை அரசுக்கு இதுவரை எழுத்து மூலம் எந்தவொரு அறிவித்தலும் வழங்கவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிடுகிறது.

குறித்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமையகத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் காரியாலயத்திலிருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு இதுவரை எழுத்து மூலம் எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரொட்னி பெரேரா குறிப்பிட்டார்.

நவநீதன் பிள்ளை அவ்வாறானதொரு கருத்தைத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதனை உடனடியாக சரிசெய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சென்ற வாரம் கடிதமொன்றின் மூலம் அறிவுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் மார்டின் நெசர்னி தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்தின் போது, டீ.எஸ். சேனாநாயக்காவின் உருவச் சிலையையும் பௌத்த கொடியையும் அகற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை என ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்களில் எவ்வித நம்பகத் தன்மையும் இல்லை எனவும், அதனை அவசரமாக சரி செய்யுமாறும் சென்ற 12 ஆம் திகதி இலங்கை அரசுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் சென்ற வாரம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

ஜனநாயக உரிமையை பாதுகாப்பது, வடக்கு மக்களின்வரப்பிரசாதம் ! .


ஜனநாயக உரிமையை பாதுகாப்பது, வடக்கு மக்களின் வரப்பிரசாதமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
3 தசாப்தகாலமாக நிலவிய யுத்த சூழல் காரணமாக பாரிய பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

என்றும் இந்நிலையில் ஜனநாயக ரீதியான தேர்தலினூடாக, தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும், அது சமூகத்தில் காணப்படுகின்ற ஜனநாயகத்திற்கான எடுத்துக்காட்டை பிரதிபலிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தனக்கு தானே சுட்டு தற்கொலை!

பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் பேலியகொட மத்திய மீன் சந்தை தொகுதியில் வைத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை தற் கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

த.தே.கூ. வின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், விபரீத முயற்சிகளை விமர்ச்சிப்போம்!

வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளதால் சிறு கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளி த்தும் விபரீத முயற்சிகளை விமர்சித்து சுமுகமான உறவைப் பேணிச் செல்ல எண்ணியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் முஸ்லிம்கள் உள்ள போதும் அனேகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதால் வாக்களிப்பில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் கனிசமான வாக்குகளைப் பெற முடியாது போனதென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனினும் வடக்கில் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக செயற்பட முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்தமை ஆறுதல் தருவதாகவும் வவுனியாவில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் இரண்டு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வருவதற்கே இடமளித்துள்ளதால் ஹக்கீம் இதற்கு முஸ்லிம் கட்சிகள் இடையே ஒற்றுமையின்மையே காரணம் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று தனிச் சின்னத்தில் போட்டியிட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தாம் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அரசாங்கத்தை விட்டு வெளியேற அவர்கள் தயாராக இருக்கவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித் துள்ளார்.

யாழ் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு உதவிப்பொருட்கள்..!


யாழ் எய்ட் அமைப்பால் இன்று செவ்வாய்க்கிழமை (24-09-2013) சமூக சேவையாளர்களும் கனடா வாழ் புலம் பெயர் ஈழத்தமிழர்களுமான திரு தி.சத்திய மூர்த்தி ,செல்வி ச.அஞ்சனா, திரு.ம.பிறேம்குமார் ஆகியோரின் அனுசரனையில் யாழ் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மாணவர்களுக்கு கறறல் மேம்பாட்டிற்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை பாடசாலை முதல்வர் திரு.மு.விக்கினேஸ்வரன் வழங்கி கௌரவித்தார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த வடமாகாண மக்களுக்கு, நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பு..




வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கை அபிவிருத்தி செய்யும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்தும் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ள பாதுகாப்பு மற்றும் ஜனநாயக சூழல் காரணமாக மக்கள் எவ்வித அழுத்தங்களுமின்றி தமது உரிமையை அனுபவித்து வருகின்றனர். வடக்கை அபிவிருத்திசெய்வதற்கு திட்டமிட்ட செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தான் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த மாவட்டங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்புவழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நோக்கத்தை வெற்றிகொள்வது எதிர்பார்ப்பு அல்ல. 30 வருடங்களாக துயரத்தை அனுபவித்த மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குவதே தனது எதிர்பார்ப்பு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Monday, September 23, 2013

தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் !



ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளாராக வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் தியாகராஜா துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார்.

தியாகராஜா துவாரகேஸ்வரனின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட இனந்தெரியாத நபர்கள் தகாத வார்த்தைகளினால் பேசி உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலங்களிலும் தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு இவ்வாறு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இது இரண்டாவது அச்சுறுத்தல் சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிபதியின் உத்தரவிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்படும் என யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

இலங்கையில் முதல் தடவையாக பஸ்களில் பெண் நடத்துநர்கள் நியமிப்பு!

இலங்கையில் முதல் தடவையாக பஸ்களில் பெண்களை நடத்துநர்களாக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவ பொத்தனை வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியு ள்ளது.

வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகார த்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டியில் இலங்கை படையினர் செய்தது என்ன? சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் ஹெய்ட்டிக்கு விரைவு!

ஹெய்ட்டியில் ஐ.நா படையின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ சிப்பாய் ஹெய்ட்டியில் பெண்ணை வல்லுறவுக் குட்படுத்தியது சம்பந்தமான அறிக்கையை பரிசீலனை செய்வதற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்காவின் உத்தரவின் கீழ் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் ஹெய்ட்டிக்கு செல்ல வுள்ளனர்.

இந்த சம்பவத்தை பரிசீலனை செய்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனையளிக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஐக்கிய நாட்டு சமாதான அலுவலகத்திற்கு உறுதியளி த்துள்ளார். ஐக்கிய நாட்டு படையில் உள்ள இராணுவ பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பமான. ஐக்கிய நாட்டின் மற்றைய விசாரணை குழுவிற்கும் விசாரணை செய்வதற்கு இலங்கை ஐக்கிய நாட்டு பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரிக்கும் அறிவிப்பு விடுக்கப்படும்.

இராணுவ தளபதியினால் இராணுவ நீதிமன்ற விசாரணை குழு அங்கத்தவர்களாக இராணுவத்தின் விதாயக ஜெனரல் மேஜர் ஜெனரல் என். ஏ. ஜே.சீ. டயஸ், ஒழுக்கம் சம்பந்தமான மேல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈகேஜேகே விஜயசிறி மற்றும் நீதிச்சேவை பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பி ராஜபதிரன, மேஜர் எச்எஸ்கே ஜயசிங்க மற்றும் மேஜர் பீ. ஏபா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரிசோதனையின் நிமித்தம் ஹெய்ட்டிக்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் நேரடியாக விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொள்வதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இராணுவ நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவர்.

இந்த விசாரணை ஆரம்பமானதும் சமாதானப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ பொறுப்பதிகாரிகள் தங்களது பொறுப்பான கடமைகளிலிருந்து தவறியிருப்பதாக விசாரணைகள் மூலம் வெளியானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இலங்கை இராணுவத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் இச்செயல்பாடு நடைபெற்றதா எனவும் விசாரணையின்போது ஆராயப்படும்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஹெய்ட்டி ஐ.நா. படையில் இராணுவ சிப்பாய் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய விசாரணை அறிக்கை ஐக்கிய நாட்டு சபையின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் இருந்து செல்லும் விசாரணைக் குழு ஹெய்ட்டியிலுள்ள அனைத்து இலங்கை இராணுவ முகாம்களுக்கும் சென்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதுடன் இதைப் போன்று சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் விசாரணை குழுவிற்கு இராணுவ தளபதியினால் அறிவுறுத்தல் விடுக்கப்படும்.

வடக்கில் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் எந்தவித மோசடிகளும் இல்லை – கோபாலசுவாமி!

வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் எவ்வித மோசடிகளும் இல்லாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டதனை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என். கோபாலசுவாமி உறுதி செய்துள்ளார்.

அவை தவிர்ந்த வெளியிடங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமக்கு அவை குறித்து எவ்வித நேரடி அனுபவங்களும் இல்லையெனவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்துள்ளார்.

வட மாகாணத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுப்பதற்காக என். கோபாலசுவாமி தலைமையில் வருகை தந்திருந்த தெற்காசியாவின் தேர்தல் முகாமைத்துவ அமைப்பு தமது கண்காணிப்பு தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கையினை நேற்று மாலை 7 மணியளவில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைத்தது. அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்துகளை முன்வைத்தார்.

தேர்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் சீராகவும் நம்பிக்கைக்குரியதாகவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் தொடர்பில் சிறந்த அறிவுடைய அதிகாரிகள் வெகு சிறப்பாக தமக்குரிய கடமைகளை முன்னெடுத்திருந்தனர். அந்த வகையில், வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் எவ்வித மோசடிகளுமின்றி அனைத்து செயற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதை எம்மால் உறுதி செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.

இராணுவத்தினர் சிவில் உடைகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற போதிலும், அவை குறித்த எவ்வித அத்தாட்சிகளும் இல்லாத நிலையில் எம்மால் அதனை ஊர்ஜிதம் செய்ய இயலாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இடம் பெயர்ந்தோர் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வருவதற்கான வாகன வசதிகளை செய்து கொடுத்தமை மற்றும் எழுந்தமானமாக வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை ஆகிய தேர்தல்கள் ஆணையாளரின் செயற்பாடு களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் தேர்தல்களை மேலும் நீதியானதும் காத்திரமானதாகவும் முன்னெடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் பெப்ரல், சி. எம். இ. வி. போன்ற அமைப்புகள் தமது பிரதிநிதிகளை ஒவ்வொரு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் நிறுத்தியிருந்த மையினால் அங்கு மோசடிகள் இடம்பெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் .



கடந்த 21ம் திகதி  நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
.

வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண சபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பொதுமக்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவாக செயற்பட இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக, பரந்தளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -

வடமாகாணத்திற்கான தேர்தல் , இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான வெற்றி...




வடமாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ரீதியான வெற்றியென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எல்ரீரீஈ பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியத்தும் வாயந்ததென ஹிந்து செய்தித்தாளின் செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திரமாகவும், அமைதியாகவும் தேர்தல் இடம்பெற்றுள்ளது.

அதற்கு சிறந்த உதாரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளமை. இந்நிலையில் சூத்திரதாரக் குழுக்களின் பிடியில் சிக்காமல் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களில் ஒருவனாய் - அங்கஜன்



“என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்” என தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அங்கஜன் அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கையில்

விழுதாக நிற்கும் என் வெற்றிக்கு விதையூன்றி நீருற்றிய என அன்பு உறவுகளே !
எனது வெற்றிக்கு நானும் நீங்களும் கடந்து வந்த பாதைகள் கனதியானவை, கரடு முரடானவை. என்னை ஒரு வெற்றியாளனாக்கிய உங்களுக்கு தெரியும் , இந்த வெற்றி இலகுவாக சுவைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது. நான் ஆரம்பம் முதலே சொல்லி வந்தது போல், மக்கள் சரியானவர்களை இனங்காணுவர்கள் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.

என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்.நேர்மையான அரசியலுக்கு ஒரு அங்கீகாரம் தந்திருக்கிறீர்கள். இளைய சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வாக்குளால் உங்கள் பிரதிநிதியாக்கிருக்கிறீர்கள். நாளைய சமூகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பரிய பொறுப்பைத் தந்திருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை விட கடுந்துயர் அடைந்துதான் எனக்கு இந்த வெற்றியை அளித்திருக்கின்றீர்கள். உங்கள் துன்பங்களை நானும் நன்கறிந்தவன். பல முனைகளில் நான் எதிர் நீச்சல் போடுவதற்கு எனக்கு ஊக்கிகளாகவும் உந்துதல் சக்திகளாகவும் இருந்து செயற்பட்டவர்கள் நீங்கள். உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இதில் நான் கற்றதும், கற்றுத் தெளிந்ததும் பல…இதற்காக வெறுமனே நன்றி மட்டும் சொல்லி நில்லாமல் அதற்கும் மேலாக உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாயிருந்து, கடந்த காலங்களை விடவும் அதிக நேரத்தை உங்களுக்காக ஒதுக்க வேண்டிய கடமை என்னிடம் வந்திருக்கிறது. ஆயினும் நான் உங்கள் வழி நின்று எத்துணை இடர்கள் வரினும் அத்தனையும் தாண்டி உங்களுக்காக களம் காண்பேன் என்பதனை உறுபடத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தச் சந்தர்பத்தில் என் வெற்றிக்காக உழைத்த என்னினிய சகோதரர்களை மறந்துவிடமுடியாது. எத்தனை இடர்கள், தடைகள் வந்திருந்த போதிலும் அத்தனையையும் எனக்காக தமதாக்கி, என் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் காலத்தால் மறவாத நன்றி பல……எனது வெற்றி அவரகளின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி. எனது வெற்றி இளைஞர்களுக்கான வெற்றி. குறிப்பாக தம் சிரமம் பாராமல் பணி செய்த சகோதரிகள் மறக்கப்பட முடியாதவர்கள். என்னுடைய வெற்றியை வேண்டுமானல் கட்சி வைத்துக் கொள்ளட்டும். நீங்கள் தந்த அங்கீகாரத்தை நான் வைத்திருக்கவே ஆசைப்படுகிறேன்.இந்த அங்கீகாரத்தை நேர்மையான அரசியல் பயணத்திற்காக நீங்கள் அமைத்துத் தந்த பதையாகப் பார்க்கிறேன்.

என்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதனை கடமையாக நினைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. முகம் காட்டாமல் இருந்து எனக்காக உழைத்த வர்களுக்கும், என்னோடு நின்று தோழமையோடு செயற்பட்டவர்களுக்கும், நடுநிலமை காட்டி வந்த ஊடக நண்பர்களுக்கும், உடல் உள வலிமையை தந்து எம்மை ஆதரித்த எல்லாச் சொந்தங்களுக்கும் உணர்வு கலந்த நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படிக்கு
அன்றும் , இன்றும் என்றும் உங்களில் ஒருவனாய்
அங்கஜன் இராமநாதன்.

இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று விசேட உரை!




வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் இன்று [24-09-2013 ]செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2005 ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக உரையாற்றுகிறார்.ஜனாதிபதி மகிந்த இவ்விஜயத்தின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் ஷர்மா மற்றும் ஆசிய, ஆபிரிக்கக் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

அதேவேளை, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்காக நியூயோர்க்கில் இரவு விருந்துபசாரமொன்றையும் ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார் என அறியவருகிறது.வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும, பா.உ. சஜின்வாஸ் குணவர்தன, பா.உ.. லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.

வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும்-பசில்!

24-09-2013 today news..
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ [22-09-2013]நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.


வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதி யாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலத்தில் நேற்று முன்தினம் விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப் பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளியாகியுள்ள வட மாகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால் அதனையொரு பாடமாகக் கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்துள்தெனவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் மக்கள் தமது வீடுகளிலிருந்து சுதந்திரமாக வெளியே சென்று வாக்களிக்க முடிந்துள்ளமைக்கு இராணுவத்தினரே காரணம். இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று மக்கள் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்குமென்பதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். சர்வதேசம் குற்றம் சுமத்தி வந்த வடக்கு மக்களின் ஜனநாயகம் இன்று நேர்மையான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய முழு கௌரவமும் ஜனாதிபதியவர்களுக்கும் முப்படையினருக்கும் மாத்திரமே உரியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண சபையை பொறுப்பேற்கவுள்ள முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகத்திற்கு வடக்கு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து பாரிய பொறுப்பு உண்டு. அதிகாரத்தை பொறுப்பேற்றுக் கொள்வது மாத்திரம் வெற்றியல்ல. இலங்கையர்கள் என்ற உணர்வோடு நாட்டின் அபிவிருத்தி, ஐக்கியம், மக்களின் மகிழ்ச்சிக்காக இவர்கள் தமது வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தெற்கிலிருந்தவர் ஆகையினால் அவர் அதனை சரியாக செய்வாரென எதிர்பார்க்கின்றோம்.

வடக்கிலுள்ள சிறுபான்மையினரான சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் மாகாண சபைக்குரிய பொலிஸ் காணி அதிகாரம் குறித்து கட்சிக்குள்ளேயே வேறு கருத்துக்கள் நிலவுவதால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் சுயாதீன குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன அது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்குமெனவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தேவாலய தாக்குதலில் பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு !

பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரம் பெஷாவர். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சர்ச் ஒன்று உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்ச்சில் சுமார் 700 பேர் வரை கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ‘பாகிஸ் தான் சர்ச்’ என்று மிகவும் புகழ் பெற்ற தேவாலயமாக இந்த சர்ச் விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை பிரார்த்தனை முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம மனிதர்கள் துப்பாக்கியுடன் அங்கு நுழைந்து சர்ச்சில் பாதுகாப்புக்கு இருந்த 2 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர். அடுத்தடுத்து ஓரிரு வினாடிகளில் சக்திவாய்ந்த 2 குண்டுகளை அங்கு வெடிக்க செய்தனர். குண்டுகள் வெடித்து சிதறியதில் சர்ச்சில் இருந்து வெளியில் வந்தவர்கள் உடல் சிதறி விழுந்தனர். வளாகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் பலர் உயிருக்கு துடித்தனர். உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்தனர்.

அதற்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயம் அடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் வரை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதி ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏழை மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிரவாதிகளால் நமது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது இஸ்லாத்துக்கு எதிரானதும் என பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அதிபர் சர்தாரியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதல் மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரனே வட மாகாண சபையின் முதலமைச்சர்! - ஒருமித்த குரல் ஒலிக்கிறது!!

வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வீ. விக்னேஸ்வரனை நியமிப்பதற்காக இன்று (23) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.

அவரை வட மாகாண சபையின் முதலமைச்சருக்கான வேட்பாளராக நியமித்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.

அதற்கேற்ப, வட மாகாண சபைக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து போட்டியிட்ட விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட 28 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ரீஎன்ஏ உறுப்பினர்கள் அனைவரும் விக்னேஸ்வரனை முதலமைச்சராக்குவதற்காக ஒன்று கூடியுள்ளனர். அங்கு அனைவரும் ஒருமித்து விக்னேஸ்வரனை முதலமைச்சராக்குவது குறித்து உத்தியோக பூர்வ தீர்மானம் எடுத்துள்ளனர்.

(கேஎப்)

பணத்தால் வெற்றியை நிர்ணயிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்! – தயாசிரி ஜயசேக்கர

குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார். ஹெட்டிபொல பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜயசிரி ஜயசேக்கரவின் வருகையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சி இத்தேர்தலில் எவ்வாறிருக்கும் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 37 பேரும் சேர்ந்து 165000 வாக்குகளையே பெற்றனர். 336,327 வாக்குகளை என்னால் பெற முடிந்தது.

குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சரிந்து வீழ்ந்துள்ளது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குருணாகல் மாவட்ட தலைவர் அகில காரியவசத்தின் தொகுதி 18 வீத வாக்குகளையே பெற்றுள்ளது.

விருப்பு வாக்குகளுக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம். எனவே பணத்தால் வெற்றியைக் கணிப்பிட முடியாது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவும் தயாசரி ஜயசேக்கர ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி 8000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பல்!

சவுதி அரேபிய அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அந்தநாட்டில் தங்கியிருந்த சுமார் 8000 இலங்கையர்கள் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்காக சுமார் 10,000 பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளதுடன் இதுவரை நாடு திரும்பாத நிலையில் பலர் அங்கு தங்கியிருப்பதாகவும், அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு இங்குள்ள அவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் பிரதிப் பொது முகாமையாளர் கூறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நவம்பர் மாதம் 3 ஆம் திகதியின் பின்னர் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள், சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்று சுட்டிக்காட்டியதுடன் பொதுமன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி நாடு திரும்புவோருக்கு விசேட விமான பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் கூடிய விரைவியல் நாடு திரும்பவேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையத்தயார்-எம்.ஏ.சுமந்திரன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்திசெய்தால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளத்தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை தமது கட்சி புறக்கணித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டார் இதேவேளை, தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் அனுப்பிய கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை இதுவரை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் அங்கி, உயிரினங்கள் வாழ முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியதுடன் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

உயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும் அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன இவையே உயிரிணங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும் எனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா? என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டபோதும் இதுவரை மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற்கொண்டபோதும் இதுவரை அவை இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பதால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது.

Sunday, September 22, 2013

ஐ. நா. மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி நியூயோர்க் பயணம்

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 68 வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நேற்று அதிகாலை அமெரிக்கா பயணமானார்.

ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய் கிழமை ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றுவார். அவர் 2005ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையில் 6வது தடவையாக இம்முறை உரையாற்றுகின்றார். அவர் முதன் முதலாக 2006ம் ஆண்டு பொது சபையில் உரையாற்றினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் 2011ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றிய போது நவீன உலகின் நிலைப்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பயங்கரவாதம் பாரிய சவாலாகும் எனும் தொனி பொருளில் உரையாற்றினார்.

அவ்வுரையின் போது பேச்சுவார்த்தை, ஒருங்கிணைப்பு முரண்பாடுகளுக்கான தீர்வை பெற்று கொள்வதற்கு ஒரே வழி கலந்துரையாடல் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று நியூயோர்க் நோக்கி பயணமான ஜனாதிபதி தனது 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன்கீ மூன் பொது நலவாய சபை செயலாளர் கமலேஸ் ஷர்மா உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பல தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

நியூயோர்க் நகரில் தங்கியருக்கும் காலப்பகுதியில் பல்வேறு பேச்சுவார்த்தை களிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும்!

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதி யாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப் பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளியாகியுள்ள வட மாகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால் அதனையொரு பாடமாகக் கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கத்திடமுள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்துள்தெனவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் மக்கள் தமது வீடுகளிலிருந்து சுதந்திரமாக வெளியே சென்று வாக்களிக்க முடிந்துள்ளமைக்கு இராணுவத்தினரே காரணம். இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று மக்கள் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்குமென்பதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். சர்வதேசம் குற்றம் சுமத்தி வந்த வடக்கு மக்களின் ஜனநாயகம் இன்று நேர்மையான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய முழு கௌரவமும் ஜனாதிபதியவர்களுக்கும் முப்படையினருக்கும் மாத்திரமே உரியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண சபையை பொறுப்பேற்கவுள்ள முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகத்திற்கு வடக்கு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து பாரிய பொறுப்பு உண்டு. அதிகாரத்தை பொறுப்பேற்றுக் கொள்வது மாத்திரம் வெற்றியல்ல. இலங்கையர்கள் என்ற உணர்வோடு நாட்டின் அபிவிருத்தி, ஐக்கியம், மக்களின் மகிழ்ச்சிக்காக இவர்கள் தமது வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தெற்கிலிருந்தவர் ஆகையினால் அவர் அதனை சரியாக செய்வாரென எதிர்பார்க்கின்றோம்.

வடக்கிலுள்ள சிறுபான்மையினரான சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் மாகாண சபைக்குரிய பொலிஸ் காணி அதிகாரம் குறித்து கட்சிக்குள்ளேயே வேறு கருத்துக்கள் நிலவுவதால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் சுயாதீன குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன அது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்குமெனவும் குறிப்பிட்டார்.

வட மாகாண சபைக்கு 13 இன் அனைத்து அதிகாரங்களும் தேவை! – ரீஎன்ஏ வாய் திறக்கத் தொடங்குகிறது...

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தாம் முன்வரவுள்ளதாகவும், போதியளவு அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு முன்வருமாயின் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் கலந்துகொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடுகிறது.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அக்கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துரைக்கும் போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறான அனைத்து அதிகாரங்களும் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிக்கேற்ப செயற்பட வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடன்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்துரைத்துள்ள வட மாகாண சபையின் முதலமைச்சருக்கான முதன்மை வேட்பாளர் சீ. விக்னேஷ்வரன் (1,32 255 விருப்பு வாக்குகள்) , அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படக் கூடாது எனவும், ‘நாங்கள் சட்டத்திற்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கமாட்டோம். எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்தே செய்வோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)


வட மாகாண சபைக்கு வெற்றி பெற்றோரின் விருப்பு வாக்கு விபரங்கள்.

நடைபெற்று முடிந்த வட மாகாண சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான வீட்டு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. அதன் வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு.

யாழ்ப்பாண மாவட்டம்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும்

அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும்

தர்மலிங்கம் சித்தர்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும்

முல்லைத்தீவு மாவட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

அன்ரனி ஜெயநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும்

சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும்,

துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும்

கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும்

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட்லெப்பை காசீம் 1,726 வாக்குகளையும்,


கிளிநொச்சி மாவட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

1 பசுபதி அரியரத்தினம் 27264
5 தம்பிராஜா குருகுலராஜா 26427
7 சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
6 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம் 1188

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

7 வை. தவநாதன் 3753
1 அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் 3531
3 கந்தசாமி பிரகலாதன் 3435
4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866
5 பொன்தம்பி தர்மசிறீ 1533
2 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977
6 மாரிமுத்து மகாதேவன் 404

வவுனியா மாவட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும்,

கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும்

ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும்

ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும்

ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Saturday, September 21, 2013

வட மாகாணத்தில் தமிழ்க் கூட்டணி வெற்றி... முதலமைச்சராக விக்னேஸ்வரன்

நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டணியால் முடிந்துள்ளது.

வட மாகாண சபைக்காக தமிழ் தேசியக் கூட்டணி மாகாண சபையின் 30 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 07 ஆசனங்களை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தில் நிற்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் 01 ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது.

வட மாகாண சபையின் மொத்த ஆசனங்கள் 38 என்பது குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

இனியவன் இசாறுதீனின் 'முள் மலர்கள்' (கவிதை நூல்) ஓர் ஆய்வு

நூல் : முள் மலர்கள் (கவிதை நூல்)

ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன் - அட்டாளைச்சேனை

நூலாய்வு : சமாஸ்ரீ தேசமான்ய அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் (B. Ed)

இனியவன் இஸாறுதீன் கவிதைக்குப் புதியவன் அல்ல. தன்னுடைய ஆத்மார்த்தமான எண்ணங்களை கவிதையாக வடித்துக் கொண்டிருப்பவர். சமுதாயநீதிக்காய் தன்னைப் புடம்போட்டுக் கொண்ட ஒரு சமூகக்கவிஞன். தூன் வாழ்ந்த சூழல், வாழும்சூழல், பழகிய இடங்கள், மானிடம், அன்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்லமானுடத்தை தேடிக் கொண்ட ஒரு இளையகவிஞன். தன்னுடைய கவிப்புலத்துவத்தினை வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து கொண்ட இனியவன் இஸாறுதீன் படைத்துள்ள ஒரு புதிய படைப்பு முள்மலர்கள். மலர் எங்கே வேண்டுமானாலும் மலரும். இந்த இனியவனும் எங்கோ இருந்தாலும் இயற்கையை ஆளுகின்ற ஒரு பொற்கலை கவிஞன். இலக்கிய உலகுக்குள் இரண்டாவது வெளியீடாக முள் மலர்கள் கவிதை நூலை வெளிக்கொணர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது.

“உயிர்த்துடிப்பாய் உணர்ச்சிப் பூச்சரமாய் உள்ளத்தின் வெள்ளப் பெருக்காய், இவரது கவிதைகள் காட்சிகளாகின்றன. சொற்களின் சூரத்தனமும் இல்லை. கவித்துவத்தின் கஞ்சத்தனமும் இல்லை. யாப்பின் அதிகாரமும் இல்லை. புதுமையின் அகங்காரமும் இல்லை. அனுபவகக் களஞ்சியமாக அறிவின் நதியோட்டமாக விளங்கும் ஒரு நல்ல கவிஞனோடு கைகுலுக்குகிறேன்” என்று வாழ்த்துரை வழியாக ஒரு நல்ல கவிஞனோடு கைகுழுக்கிறேன். என்கிறார் கவிஞர் மேத்தா அவர்கள். கவிஞர் மேத்தாவின்; இந்த வரிகள் ஊடாக இந்நூல் உள்ளத்தையே தொடுகின்றன என்பதுதான் யதார்த்தமாகும்.

கவிஞர் வேதாந்தி அவர்களின் விதந்துரையில் ‘நம்பச் சொல்லுகிறேன்’ எனும் தலைப்பில் இனியன் இஸார்தீனின் முள் மலருக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார். “மானிடத்தை மீ;ட்டெடுக்கும் மனுதர்ம நியாயங்களை பூசி மெழுகாது புடம் போட்டு வெளியாக்கி புத்துணர்வை உயிர்ப்பித்து, நாட்டாரைக் கண்டித்து நடைமுறைக்கு வற்புறுத்தும் பொறுப்புள்ள குடிமகன்” என்று வேதாந்தமும் பேசுகின்றது இக்கவிதை நூல். அணிந்துரையாய் நூலுக்கு அழகுசேர்த்துள்ளார் கலாநிதி றமீஸ் அப்துல்லா. சமூக உணர்வினால் பாதிக்கப்பட்ட கவிஞன் எனும் தலைப்பில் விரிவான விளக்கம் தந்துள்ளார். “மனித உணர்வுகளை பலவகைகளில் கவிதையாக்கியிருக்கின்ற மனிதாபிமானம் மிக்க ஒரு கவிஞரிவர். தன்னுடைய கவிதைக் கலையில் எஞ்சியிருக்கும் கருத்துக்கள் அதிகம் பேசுகின்றன. சுமூக உணர்வுகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நல்ல கவிஞர் இனியவன் இஸாறுதீன்” என்கிறார் கலாநிதி றமீஸ் அப்துல்லா.

‘முளைத்த காலத்தின் முகவரி’ எனும் தலைப்பில் தன்னுடைய இலக்கிய மேதாவியையும், தான் கொண்டுள்ள இலக்கிய பக்தியையும், படைப்பிலக்கியத்தின் மூலாதாரத்தின் வித்தைகளையும் வித்துக்களாய் தூவி முள் மலர்களுக்குள்ளே மலராபனம் செய்கின்ற கவிஞர் இனியன் இஸாறுதீனின் என்னுரை அமைந்துள்ளது. வாழ்வியல் அரசியல் இலக்கியம் அறிவியல் அறவியல், உலகியல் இனம் மதம் சமயம் என்ற கனபரிமாணங்களில் பூத்தவைகள் இந்த மலர்கள் என்றும், பகுத்தறிவும் - முற்போக்கும் - சமத்துவமும் - சமூநீதியும் - மண்நேசமும் - மனிதப் பிரியமுமே எனது மலர்களில் மருந்தாய் முளைந்திருக்கும் முட்கள்” என்கிறார் நமது இனியவன்.

முள் மலருக்குள்ளே மலர்ந்துள்ள முப்பத்துமூன்று கவிதைகளில் தன்னுடைய கவித்துளியை மழையாகக் கொட்டுகின்றார். பிரார்த்தனை எனும் தலைப்பில் “இது கவிதையாக இல்லாமல் போகட்டும் விதையாக இருந்தால் போதாதா? முதல் உண் உயிர்க்காற்றை இந்த கவிதைக்குள் ஊற்று இறைவா” என்று பிராத்திக்கின்ற முள் மலருக்குள் இன்னொரு உரிமைக்காய் குரல் கொடுக்கின்றார். “நாங்கள் தொழும் மஸ்ஜித், நாங்கள் ஓதும் வேதம், நாங்கள் அணியும் ஆடை, நாங்கள் உண்ணும் ஆகுமான உணவு, எல்லாவற்றையும் எங்கெழுக்கெதிராய் இரகசியமாகவும் பரகசியமாகவும் சிதைக்கலாம். ஆனால் தடுக்கமுடியுமா உங்களால்? என்கிற கேள்விகளை உரிமைக்குள்ள தொனியை உரத்துடன் இந்த நாட்டின் மலர்களுக்கு கிடைத்துள்ள முட்களை சொல்லில் கவிதையாய் வடிக்கின்ற கவிஞரின் கவித்துவம் எம்மை ஆட்கொண்டுவிடுகிறது.

மீட்டெடுப்பு எனும் தலைப்பில் ஒரு பட்டியலையே தேடுகின்றார் கவிஞர். அதவாது, ஒருபாய், ஒரு திருகை, ஒரு கலப்பை, ஒருசுளகு, ஒரு மண்குடம், ஒருகைப்பெட்டி, ஒருமண்சட்டி, ஒருஉரல், ஒரு உலக்கை, ஒரு அகப்பை இவ்வாறு நவீனத்துவதத்தின் வித்தைகளால் காணாமல் போன இறந்தகால வாழ்வியலை தேடுகின்றார் முள் மலர்கள் வாயிலாக. சுpன்ன அரும்புகளும் சில கேள்விகளும் எனும் தலைப்பில் தொலைந்துபோன உறவுகள், சிதைந்துபோன இன உறவு, முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன நம்பிக்கைகளை தத்ரூபமாக சொல்லிக் கொள்கிறார் கவிஞர். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார். “இன உரிமை இழந்தோம், மொழியுரிமை இழந்தோம், மானுடம் இழந்தோம், மண்ணகம் இழந்தோம், முகங்களை இழந்தோம், முகவரி இழந்தோம், முப்பது ஆண்டுகள் மூத்தகுடி இழந்தோம்” என இழந்துபோன வாழ்வியலை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்ற இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வைரமான வரிகளே.

விடியலை எழுப்பு எனும் தலைப்பில் “உள்ளத்தின் இருட்டுக்குள் உறங்குகின்ற மனிதா இன்று முதல் நீ விடியலை எழுப்பு” என்று மனிதத்தையே அனுப்புகின்றார். இவ்வாறு வரிக்குவரி, கவித்துமான தன்னுடைய எண்ணங்களை சிதறவிட்டு நம்மை சிந்திக்கச் செய்கின்ற முள் மலர்களில் எத்தனைவிதமான மலர்கள், எத்தனைவிதமான வாசங்கள், எத்தனைவிதமான நிறங்கள் என்கிற மாயைத் தோற்றத்திலிருந்து உண்மையான மனிதத்துவம் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையின் அத்தனை பாகங்களுக்குள்ளும் தன்னுடைய கவித்துவ புலமையை மேயவிட்டு முள்மலர்கள் நூலை வாசிக்கும் ஒவ்வொரு வினாடியும் முட்களே மலர்வதைக் காணலாம்.

ஆசுகவி அன்புடீன் இந்நூலாசிரியரை இவ்வாறு விழிக்கின்றமை ஆசுவான கவிஞர் என்பதை நிருபிக்கின்றார். அதாவது, “இவரது கழுகுப்பார்வைகள் முள்ளாகி, முள் மலராகி மலர் மணமாகி, மணம் காற்றாகி, காற்றுவிதையாகி இருக்கிறது” என்கிறார். அட்டைப்பட விளக்கம் தலைப்புக்கேற்றாப்போல் முட்செடியில் மலர்ந்துள்ள பூவின் அட்டையுடன் இணைந்து அதன் மலர்ச்சியை தேடுகின்ற சிறுவனின் இருப்பு கற்பனை சிதறல்களை மிஞ்சுவிடுகின்றது. முள் மலர்களின் உரிமை முப்லிஹா இஸாறுதீன். நேசம் நிறைந்த மனைவிக்கும், பாசம் நிறைந்த பிள்ளைகளுக்கும் இந்நூலை சமர்பிக்கின்றார் நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன். ஒரேவரியில் கூறுவதாயின் “முள் மலர்கள் மானுடம்தேடுகின்ற ஒரு மானுடக்கவிஞனின் மானசீகமான ஒரு கவிதைநூல் என்பது மட்டும் நிஜம்.

மன்னார் மாவட்ட முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னணியில். (பத்தாம் இணைப்பு )

நடைபெற்று முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.






தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
சிறி.மு.
காங்கிரஸ்

மன்னார் மாவட்டம்
31818
14696
180
4436
தபால்
1300
408
7
135
மொத்தம்
33,118
15,104
187
4,571
ஆசனங்கள்







தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
சிறி.மு.
காங்கிரஸ்

வவுனியா மாவட்டம்
40324
16310
1704
1967




 யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகள்
தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
தீவகம்
8917
4164
17
நல்லுர்
23733
2651
148
காங்கேசன்துறை
19596
4048
35
யாழ்ப்பாணம்
16421
2416
60
உடுப்பிட்டி
18855
2424
57
மானிப்பாய்
28210
3898
88
வட்டுக்கோட்டை
23442
3763
173
கோப்பாய்



பரித்தித்துறை



சாவகச்சேரி



தபால்
7965
1099
35
மொத்தம்
147,139
24,463
613
ஆசனங்கள்




கிளிநொச்சி மாவட்டம் 

இலங்கை தமிழரசுக் கட்சி 37079 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7897 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்

பெற்றுக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி 27620 ஆசனங்கள் 4
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7063 ஆசனங்கள் 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 199
ஐக்கிய தேசியக் கட்சி 195


நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலின் யாழ் மற்றும் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின

மன்னார் மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 1300
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135
ஐக்கிய தேசியக் கட்சி 7


யாழ் மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 7695
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35

வவுனியா மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24

கிளிநொச்சி மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும்

ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 641 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 146 வாக்குகளையும்
ஐக்கிய தேசியக் கட்சி 02 வாக்குகளையும்
ஜனநாயகக்கட்சி 01 வாக்கினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் இங்கு போட்டியிட்ட இரண்டு சுயேட்சைக் குழுக்களும் பதிவு செய்யப்பட்ட 7 அரசியல் கட்சிகளும் 0 பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.


பூச்சியம் பெற்றுக்கொண்ட கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பெயர்ப் பட்டியல்.

Eksath Lanka Podujana Pakshaya

Eksath Lanka Maha Sabha

People's Liberation Front

Jana Setha Peramuna

Nationalities Unity Organization

Sri Lanka Labour Party

Sri Lanka Muslim Congress

Independent Group 1

Independent Group 2