பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தையும், யாழ்ப்பாண த்தின் கலாசாரத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக் கைகள் யாழ். கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரு வதாக ஊடகங்கள் மூலம் பலமுறைகள் சுட்டிக்காட்டி காட்டப்பட்டிருந்தும், இதுவரையில் எந்தவொரு நடவடிக் கைகளும் இது தொடர்பான அதிகாரிகளால் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் பாடசாலை மாணவிகள் முதல், பலர் கோட்டையின் மறைவிடங்களில் உல்லாசம் அனுகவிப்பது தினம் தினம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 10 பேர் வரை (14 வயது தொடக்கம் 17 வயது வரையிலான) மாணவிகள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக பெறோறை ஏமாற்றி விட்டு, சில இளைஞர்களுடன் கோட்டைப் பகுதியில் உள்ள மறை விடங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த யாழ 5 பேர் கொண்ட ஊடகவியலாளர் குழு பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும் யாழ்ப்பாணத்தின் கலாசார த்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடனும் இம் மாணவிகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்ததோடு, மாணவர்களுக்கு அவ்விடங்களுக்கு வருவதில் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை அவரவர் வீடுகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தம்முடன் சேர்ந்து வந்த மாணவிகளை அனுப்பி வைப்பதற்கு இவர்கள் யார் எனவும், அப்பெண்களே தம்முடன் வரத்தயராக இருக்கும் நிலையில், அவர்களைத் தடுக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என, ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட அங்கிருந்து இளைஞர் குழு, உடனடியாக தமக்கு ஆதரவு தேடும் நோக்கில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட தமது சக நண்பர்களையும் அழைத்து ஊடகவியலாளர்களின் மேல் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர்.
இவ்வேளை மாணவியொருவரை அழைத்து வந்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 18 வயதான இளைஞன் ஒருவனை ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில் சிறிய கத்தியொன்றை எடுத்து ஊடகவியலாளர்களைத் தாக்கவும் முற்பட்டதனையடுத்து, கோட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, சுற்றுலாவுக்கென அங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களும் இச்சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதே வேளை இச்சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட இளைஞர்களில் அதிகமானவர்கள் மது போதையிலிருந்ததோடு, போதைப் பொருட்களையும் பாவித்திருந்த மையையும் ஊடகவியலாளர் குழுவால் அவதானிக்க முடிந்தது.
.jpg)
No comments:
Post a Comment