பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்கள் பலரை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து என்ற போர்வையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றி வருகின்றனர். பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கையை, அந்நாட்டின் மனித உரிமை அமைப்பின் இயக்குனர், டேவிட் மெப்பம், கண்டனம் செய்திருந்தார். 'பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள், அந்நாட்டு ராணுவத்தின் கொடுமைக்கு, மீண்டும் ஆளாக நேரிடும். இலங்கையில், விடுதலை புலி ஆதரவாளர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன' என, டேவிட் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த லண்டன் ஐகோர்ட், இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப தடை விதித்துள்ளது.
இதற்கு பிரிட்டன் எல்லைபுற பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்படி தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது' என, எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment