Friday, March 1, 2013

எல்லா நாம்பனும் ஓடுதென்று வயிற்று நாம்பன் குட்டியும் வாலை கிளப்பிக்கொண்டு ஓடின கதை தெரியுமோ?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22 ம் அமர்வு திட்டமிட்டபடி ஆரம்பமாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. தமிழ் அரசியல் வாதிகள் இற்றைக்கு 1 வருட காலமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு 2013 மார்ச் மாதத்தில் வருகின்றது அப்போது தமிழீழம் வாங்கித்தருவோம் என மேடைகளில் முழக்கமிட்டு வாக்குவாங்கிய கதையை பலரும் மறந்திருப்பனர்.

தமிழீழம் கிடைக்குமோ என்னவோ அறிக்கைகள் ஏராளம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் நேற்றுவரை இலங்கை இராணுவத்தின் கவச வாகனத்தினுள் முகமூடி போட்டுக்கொண்டு காட்டிக்கொடுத்து திரிந்த துரைரெட்ணமும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் „மனித நேயமற்ற, மனிதகுலத்திற்கெதிரான ஈவிரக்கமற்ற யுத்தத்தின் கொடுரம் காரணமாக ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், கொன்றழிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாலசந்திரனின் படுகொலை மறைக்க முடியாத சிறந்த சான்றாகும்' என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக உயிர்கள் அழிக்கப்பட்டது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் இத்தனை அழிவுகளிலும் நேரடி பங்காளியாக இருந்த இரா துரைரெட்ணம் இன்று சுத்த சுவாமியாக மாறியுள்ளதுதான் நகைப்பு.

இந்தியன் ஆமியுடன் தொடங்கி இலங்கை இராணுவம் முள்ளிவாய்காலில் புலிகளை முடிக்கும் வரை முகமூடியுடன் நின்ற துரைரெட்ணத்தால் ஈபிஆர்எல்எப் அமைப்பினால் கொல்லப்பட்ட தமிழ் உயிர்களின் எண்ணிக்கையை சற்று மீட்டுப்பார்க்க முடியுமா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment