Wednesday, May 29, 2013

இலங்கை விமானப்படையினால் காப்பாற்றப்பட்ட வன்னி இளைஞனின் கை.

கடந்த 25ம் திகதி அன்று வன்னியில் வறுமைக்கோட்டின் கீழ் நாளாந்த உழைப்பில் வாழும் இளைஞன் ஒருவன் வழமைபோல் வன்னியிலுள்ள மரச்காலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். மாலை 6.30 மணியளவில் அங்குள்ள இயந்திர வாள் இளைஞனின் கையை பதம் பார்த்தது. உடன் வேலை செய்தவர்கள் தோழுக்கு சற்று கீழ் அறுந்து தொங்கும் கையுடன் அவனை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அள்ளிச் சென்றனர்.

இளைஞனின் நிலைமையை பரிசோதித்த கிளிநொச்சி வைத்திசாலை வைத்தியர்களுக்கு இரு தெரிவுகள் இருந்தது. முதலாவது தெரிவு, நான்கு மணித்தியாலய நேரத்தினுள் விசேட சத்திர சிகிச்சை ஒன்று செய்தால் கையை மீண்டும் ஒட்டலாம். ஆனால் அதற்கான உபகரணங்கள் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் மாத்திரமே உண்டு. இரண்டாவது தெரிவு கையை அறுந்த இடத்தால் வெட்டி விடுவது.

வைத்தியசாலை நிர்வாகம் வன்னி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை தொடர்பு கொண்டு நிலையை எடுத்துக்கூறியது. உழைக்கும் கரம் ஒன்று அறுத்தெறியப்பட்டால்;, அந்தக் கையில் தங்கிவாழும் உயிர்களின் எதிர்காலத்தை கேள்வி உள்ளாக்க விரும்பாத தளபதி உடனடியாக செயற்பாட்டில் இறங்கினார். விமானப்படைத் தலைமையகத்தை தொடர்பு கொண்டு விசேட உலங்கு வானூர்தி ஒன்றிற்கு ஒழுங்கு செய்தார். சில நிமிட நேரங்களில் வைத்தியசாலைக்கு அருகாமையில் இறங்கிய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி அறுந்து தொங்கும் கைக்கு முதலுதவி வழங்கப்பட்டிருந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி நோக்கி பறந்தது. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு எயளஉரடயச ளரசபநசல செய்யப்பட்டதாகவும் அவன் தேறி வருவதாகவும் அறிய முடிகின்றது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கிளிநொச்சி வைத்திசாலையின் பிரதான வைத்திய அதிகாரி, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்றும் அவ்வாறு தாம் வன்னி இராணுவத் தலைமையகத்துடன் பேணிவரும் உத்தியோகபூர்வ ஒத்துழைப்புக்களால் குறித்த இளைஞனுக்கு உரிய உதவியளிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் லாபங்களுக்காக வடகிழக்கிலிருந்து வெளியேறவேண்டும் எனக் கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் இவ்வாறான அனர்த்தங்களின்போது இராணுவத்தினரே மக்களுக்கு உதவுகின்றனர் என்பது சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களது ஏகோபித்து கருத்தாக உள்ளது.






No comments:

Post a Comment