Wednesday, May 29, 2013

இன்னும் ஆயிரக்கணக்கான பிக்குகள் தீக்குளிக்க முன்வந்துள்ளனர்!

அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடாத்துவது போன்ற இழிசெயல்களைச் செய்தால், அதற்கு எதிராக தீக்குளிப்பதற்கு போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் முன்வருவார்கள் என பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் குறிப்பிடுகிறார்.

அந்த உத்தம தேரர் தன்னுயிரைத் தியாகம் செய்த செயலினால் வெட்கப்படத் தேவையில்லை. அவரது தீக்குளிப்பு பசுவதைக்கு எதிராக இருந்தபோதும், அன்னார் உயிர்த்தியாகம் செய்தது பௌத்த உயர்பீடத்தை உயர்த்தும் நோக்குடனேயே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயினும், ஊடகங்கள் அவர் பசு வதைக்கு எதிராகத் தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிடுவதானது, அவரை அகௌரவப்படுத்துவதாகும்.

போவத்தே இந்திரரத்ன தேரரின் சாவுக்கான பொறுப்பை அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்க முடியாது என்றும், கட்டங்கள் கட்டும் கருமத்தை சற்றுவிட்டுவிட்டு இப்போதாவது நாட்டை நேசிக்கக் கூடிய மக்களை உருவாக்க வேண்டியது கடமையாகும் எனவும் ஞானஸார தேரர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment